முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் முழு வீச்சில் நடைபெற்றுவரும் மழை நிவாரணப் பணிகள் – கடலூரில் திரும்பிவரும் இயல்புநிலை – அமைச்சர்கள், அதிகாரிகள், கழக நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களை சந்தித்து நிவாரண உதவி வழங்கல்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் முழு வீச்சில் நடைபெற்றுவரும் மழை நிவாரணப் பணிகள் – கடலூரில் திரும்பிவரும் இயல்புநிலை – அமைச்சர்கள், அதிகாரிகள், கழக நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களை சந்தித்து நிவாரண உதவி வழங்கல்

தமிழகத்தில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடலூரில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது.

முதலமைச்சர் மேற்கொண்ட துரித நடவடிக்கைகளால், கடலூர் மாவட்டத்தில் இயல்புநிலை திரும்பி வருகிறது. பெரும்பாலான பகுதிகளுக்கு போக்குவரத்து முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 583 கிராமங்களில் 400க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது. ஒரிரு இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மின்விநியோகம் முழு அளவில் சீரமைக்கப்பட்டுள்ளது.

காராமணி குப்பத்தில் ஆழ்துளைக் கிணறு சீரமைக்கும் பணியினையும், கம்மியம்பேட்டை, கெடிலம் ஆற்றங்கரையை பலப்படுத்தும் பணிகளையும் அமைச்சர்கள் திரு. ஓ. பன்னீர்செல்வம், திரு. எம்.சி. சம்பத் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

புருஷோத்தமன் நகர், புதுப்பாளையத்தில் வெள்ள பாதிப்பையும், S-புதூர், ராமாபுரம், வழிசோதனைபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த வாழைப் பயிர்களையும் பார்வையிட்டு அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆலப்பாக்கம், மேட்டுப்பாளையம் பகுதிகளில் மின்சீரமைப்புப் பணிகளையும் துரிதப்படுத்தினர்.

சாத்தப்பாடி கிராமத்தில் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் ஏற்றும் பணிகளையும், வடக்கு கிருஷ்ணாபுரத்தில் மின்சீரமைப்புப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

சிதம்பரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணிகளையும், மின்சீரமைப்புப் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

விசூர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டது.

பரங்கிப்பேட்டை மற்றும் கீரப்பாளையம் ஒன்றியங்களில் மீனவ கிராமங்கள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் திரு. கே.ஏ. ஜெயபால் பார்வையிட்டு சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்தினார்.

தா.சோ.பேட்டை, எம்.ஜி.ஆர். திட்டு பகுதிகளில் மின்கம்பங்கள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நடமாடும் மருத்துவக் குழுக்கள், கிராமம் கிராமமாகச் சென்று மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர்.