முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க லட்சிய பேரணி

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க லட்சிய பேரணி

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க லட்சிய பேரணி பல்வேறு மாவட்டங்களில் எழுச்சியுடன் நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ள 64 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட ஐந்து கோடியே 79 லட்சம் வாக்காளர்களை நேரில் சந்தித்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான கழக அரசின் சாதனைகள், ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில் விளக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆற்றிய பதிலுரை, புத்தகங்களாக அச்சிடப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

விழுப்புரம் தெற்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில் திருக்கோவிலூரில் மாபெரும் சாதனை விளக்க லட்சியப் பேரணி நடைபெற்றது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க அரசின் சாதனை விளக்க பிரசுரங்கள் பொதுமக்கள், வணிகர்களிடம் வழங்கப்பட்டன. இதில், அமைச்சர் திரு. ப.மோகன் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல், விழுப்புரம் வடக்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், மரக்காணத்தில் சாதனை விளக்க லட்சியப் பேரணி நடைபெற்றது. கழக அரசின் சாதனை விளக்க பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் லட்சுமணன், திரு. எஸ்.ராஜேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். திருவாரூர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் நன்னிலத்தில், லட்சியப் பேரணி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வழிநெடுகிலும், கழக அரசின் சாதனைகளை விளக்கும் பிரசுரங்களை விநியோகித்தனர். இதில், அமைச்சர் திரு.ஆர்.காமராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னதாக, மாவட்ட அம்மா பேரவை சார்பில், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கப்பட்டன.

கடலூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில், விருத்தாசலத்தில் சாதனை விளக்க லட்சியப் பேரணி நடைபெற்றது. விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் தொடங்கி நகராட்சி அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது. இதில் அமைச்சர் திரு. எம்.சி.சம்பத் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சாதனை விளக்க பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சிப் பகுதியில், தெற்கு மாவட்டக் கழக அம்மா பேரவை சார்பில், மாபெரும் லட்சியப் பேரணி நடைபெற்றது. பஜார் வீதி, சேத்துப்பட்டு சாலை, திண்டிவனம் சாலை வழியாக நடைபெற்ற பேரணியில் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சரித்திர சாதனைகளை விளக்கும் கையேடுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

சேலம் மாநகர ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில் சாதனை விளக்கப் பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, முதல் அக்ரஹாரம் கடைவீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நடைபெற்றது. இதில், கழக அமைப்புச் செயலாளர் திரு. செம்மலை உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

வேலூர் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், சாதனை விளக்க லட்சியப் பேரணி நடைபெற்றது. காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிலையம் அருகில் இருந்து புறப்பட்டு, நகரின் முக்கிய சாலைகள் வழியாக பல்வேறு பகுதிகளில் பகுதிகளில் பேரணி நடைபெற்றது. கழக அரசின் சாதனை விளக்க புத்தகங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பா.செங்குட்டுவன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

வேலூர் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் சாதனை விளக்க லட்சியப் பேரணி நடைபெற்றது. ஆலங்காயம் பகுதியில் இருந்து முக்கிய சாலைகள் வழியாக கழக நிர்வாகிகள் பேரணியாகச் சென்று, கழக அரசின் சாதனை விளக்க புத்தகங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.