முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, சிறப்புத் திட்டங்களின்கீழ், தமிழகம் முழுவதும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, சிறப்புத் திட்டங்களின்கீழ், தமிழகம் முழுவதும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, சிறப்புத் திட்டங்களின்கீழ், தமிழகம் முழுவதும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும், மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

நாகப்பட்டினம் நகராட்சிப் பகுதியைச் சேர்ந்த 26,271 இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை அமைச்சர் திரு.கே.ஏ.ஜெயபால் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவத்திபுரம் நகராட்சிப்பகுதியில், ஆயிரத்து 941 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை அமைச்சர் திரு.முக்கூர் என்.சுப்ரமணியன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.செஞ்சி சேவல் வெ.ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விருதுநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிளஸ்டூ பயிலும் 421 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

இதனிடையே, திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கருமண்டபம் பகுதியில் 5 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம் மற்றும் கருமண்டபம் பால்பண்ணை அருகில் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட சோலார் வசதியுடன் கூடிய நவீன பேருந்து நிழற்குடை திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் திரு.டி.பி.பூனாட்சி, அரசு தலைமைக் கொறடா திரு.ஆர்.மனோகரன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ப.குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திறந்துவைத்த பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பதி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 9 ஊர்களுக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திரு.கே.டி.ராஜேந்திர பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.