முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு:223 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு:223 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்

புதன், பெப்ரவரி 17,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி, திண்டுக்கல் மாவட்டம், பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், பாச்சலூர் மலைப்பகுதியில் உள்ள பரப்பலாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்தினர். அவர்களின் வேண்டுகோளினை ஏற்று, முதலமைச்சர்  ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, அணையிலிருந்து பாசனத்திற்காக 74 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. உதயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதன் மூலம், திண்டுக்கல், கரூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள ஆயிரத்து 223 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் என்பதால், முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.