முதலமைச்சர் ஜெயலலிதா உத்தவின்பேரில் திருவண்ணாமலையில் 1,068 இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு விலையில்லா தலைகவசம் வழங்கப்பட்டன

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தவின்பேரில் திருவண்ணாமலையில் 1,068 இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு விலையில்லா தலைகவசம் வழங்கப்பட்டன

புதன், பெப்ரவரி 24,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தவின்பேரில், திருவண்ணாமலையில் அ.இ.அ.தி.மு.க. சார்பில், ஆயிரத்து 68 இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு விலையில்லா தலைகவசம் வழங்கப்பட்டன. உயிர்காக்கும் தலைகவசம் வழங்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். 

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், திருவண்ணாமலையில் ஆயிரத்து 68 இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு உயிர்காக்கும் விலையில்லா தலைகவசங்களை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் பெருமாள்நகர் திரு. K. ராஜன் வழங்கினார். முதலமைச்சர் உருவம் அச்சடிக்கப்பட்ட டி-சர்ட் மற்றும் தலைகவசங்களை அணிந்தபடி, இருசக்கர வாகன ஓட்டுநர்கள், கழக கொடியினை ஏந்தியபடி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாகச் சென்று, தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டுநர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணி முடிவில், உயிர்காக்கும் தலைகவசங்களை பெற்றுக் கொண்ட இருசக்கர வாகன ஓட்டுநர்கள் முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.