முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, நாகை மாவட்டத்தில் அணைகள் கட்டுவதற்கான பூமிபூஜை : முதலமைச்சருக்கு விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, நாகை மாவட்டத்தில் அணைகள் கட்டுவதற்கான பூமிபூஜை : முதலமைச்சருக்கு விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 26, 2016,

முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவுப்படி, நாகை மாவட்டம், நாட்டாறு மற்றும் மகிமலையாற்றின் குறுக்கே 1 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் படுக்கை அணைகள் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதற்காக, முதலமைச்சருக்கு விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
மகிமலையாற்றின் குறுக்கே படுக்கை அணை கட்டுவதற்கு முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவுப்படி 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் காரணமாக முருகந்தோட்டம், பூவாலை, வழுவூர், அசிக்காடு, கோவங்குடி உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்து 800 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், மழைக்காலத்தில் வெள்ளநீர், நிலத்தடியில் சேமிப்பதற்கும் வழிவகை ஏற்பட்டுள்ளது. இதேபோல், நாட்டாற்றின் குறுக்கே 1 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவில் படுக்கை அணை கட்டுவதற்கு முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவுப்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், நல்லாவூர், காஞ்சிவாய், பருத்திகுடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இதற்காக நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தங்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு, விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.