முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், 260 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், 260 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன

திங்கட்கிழமை, பிப்ரவரி 29, 2016,

வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின்பேரில், வேலைவாய்ப்பினை பெருக்கும் வகையில், சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தனித்துறை நிறுவனங்கள் மூலம் அரக்கோணம், காவேரிபாக்கம், திருப்பத்தூர், காட்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற முகாம்களில், பல்லாயிரக்கணக்கான பயனடைந்துள்ளனர். இந்நிலையில், வேலூர் கிழக்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை, வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு தொழில்திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவை இணைந்து ஆற்காடு நகரில், வேலைவாய்ப்பு முகாமை நடத்தின. இதில், டி.வி.எஸ். வீல்ஸ் லிமிடெட், Hyundai, MM Forge, எல்அண்ட்டி உள்ளிட்ட 27 தனியார் நிறுவனங்கள் வேலை வழங்க முன்வந்தன. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 260 பேர் உடனடியாக தேர்வு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. பணி ஆணைகளை பெற்றுக்கொண்டவர்கள் முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.