முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகள் இன்று முதல் மூடல்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகள் இன்று முதல் மூடல்

ஞாயிறு, ஜூன் 19,2016,

சென்னை : முதல்வர் ஜெயலலிதா அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றன. இதற்கான அரசாணை நேற்று வெளியானது. மூடப்படும் மதுபானக்கடைகளில்  பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்று வேலை அளிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் படிப்படியாக மதுபானக்கடைகளை குறைப்போம் என  மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியில் உறுதியளித்து இருந்தார். மேலும் மதுபானக்கடைகள் பணி நேரம் குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். அதன் படி முதல்வர் ஜெயலலிதா மீண்டும் பதவியேற்றதும் மதுபானக்கடைகளின் பணி நேரம் மதியம் 12 மணி நேரம் முதல் இரவு 10 மணிவரை குறைக்கப்பட்டது. ஏற்கனவே மதுபானக்கடைகள் காலை 10 மணி முதல்  இரவு 10 மணி வரை செயல்பட்டன. தற்போது தமிழகத்தில் உள்ள மதுபானக்கடைகளின் பணி நேரத்தில் 2 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் முதல்கட்டமாக 500 மதுபானக்கடைகள் இன்று முதல்(ஞாயிற்றுக்கிழமை) மூடப்படுகின்றன. மூடப்படும் மதுபானக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்று வேலை  அளிக்கப்படும். 500 மதுபானக்கடைகள் மூடப்படுவடுவது குறித்து தமிழக அரசு ஆணை நேற்று வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர்கள், டாஸ்மாக்கின் மூத்த பிராந்திய மேலாளர்கள், அளித்த பரிந்துரையின் அடிப்படையில்  முதல் கட்டமாக மூடப்படும் 500 மதுபானக்கடைகள் கண்டறியப்பட்டன.

மூடப்படும் மதுபானக்கடைகளில் உள்ள மதுபான பாட்டில்கள் டாஸ்மாக் மதுபான கிடங்கிற்கு அனுப்பப்படுகிறது. இதர பொருட்களான மேஜை, நாற்காலி ஆவண விவரங்கள், பில்லிங் மெஷின், பாட்டில் கூலர்கள் அந்தந்த மாவட்ட மேலாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்று முதல் மூடப்படும்   500 டாஸ்மாக் மதுபானக்கடைகள் விவரம் வருமாறு:-
சென்னை மண்டலத்தில்  58 கடைகள், கோயம்பத்தூர் மண்டலத்தில் 60 கடைகள், மதுரை மண்டலத்தில் 201 கடைகள், திருச்சி மண்டலத்தில் 133 கடைகள், சேலம் மண்டலத்தில்  48 கடைகள் என மொத்தம் 500 டாஸ் மாக் மதுபானக்கடைகள் மூடப்படுகின்றன.
இதைப்போன்று அனைத்து மதுபானக்கடைகளும் படிப்படியாக மூடப்படுகிறது. இந்த கடைகளை மூடுவதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. இந்த ஆணை விவரத்தை டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கிர்லோஷ் குமார் வெளியிட்டுள்ளார்.

மண்டல வாரியாக மூடப்படும் கடைகளின் எண்ணிக்கை….

சென்னை மண்டலம்

சென்னை வடக்கு 2

மத்திய சென்னை 3

தென் சென்னை 2

காஞ்சிபுரம் வடக்கு 13

காஞ்சிபுரம் தெற்கு 3

திருவள்ளூர் கிழக்கு 16

திருவள்ளூர் மேற்கு 19

மொத்தம் 58

 

கோவை மண்டலம்

கோவை வடக்கு 1

கோவை-தெற்கு 4

திருப்பூர் 8

ஈரோடு 16

நீலகிரி 31

மொத்தம் 60

 

மதுரை மண்டலம்

மதுரை தெற்கு 21

மதுரை வடக்கு 16

திண்டுக்கல் 10

ராமநாதபுரம் 36

விருதுநகர் 27

சிவகங்கை 43

நெல்லை 9

தூத்துக்குடி 30

கன்னியாகுமரி 6

தேனி 3

மொத்தம் 201

 

திருச்சி மண்டலம்

திருச்சி 14

நாகப்பட்டினம் 16

தஞ்சாவூர் 16

புதுக்கோட்டை 14

கடலூர் 15

கரூர் 14

திருவாரூர் 8

விழுப்புரம் 29

பெரம்பலூர் 7

மொத்தம் 133

 

சேலம் மண்டலம்

தருமபுரி 1

கிருஷ்ணகிரி 6

நாமக்கல் 11

வேலூர் 8

திருவண்ணாமலை 18

அரக்கோணம் 4

மொத்தம் 48