முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி சிறப்புத் திட்டங்களின் கீழ், தமிழகம் முழுவதும் மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி சிறப்புத் திட்டங்களின் கீழ், தமிழகம் முழுவதும் மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, சிறப்புத் திட்டங்களின் கீழ், தமிழகம் முழுவதும் மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில், அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 613 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. எஸ். முத்துக்கருப்பன், திரு. விஜிலா சத்யானந்த், மேயர் திருமதி புவனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மடிக்கணினிகளை பெற்றுக்கொண்ட மாணவிகள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

வேலூர் மாவட்டம் ரெண்டாடி, ஒழுகூர், நீலகண்டராயபுரம் பகுதிகளில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 311 மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. திருத்தணி கோ. அரி, கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வள்ளன்குமார விளை அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் 250 மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 250 மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.