முதலமைச்சர் ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டி, அனைத்து மாவட்ட அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் விருப்ப மனு

முதலமைச்சர் ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டி, அனைத்து மாவட்ட அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும்  விருப்ப மனு

புதன், பெப்ரவரி 03,2016,

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களில், அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு, கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளபடி, சென்னையில் உள்ள தலைமைக் கழகத்தில், விண்ணப்பப் படிவங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ஏராளமானோர், முதலமைச்சர் ஜெயலலிதாவை மீண்டும் அரியணையில் அமர்த்திட சூளுரைத்து, ஆர்வமுடன் விருப்ப மனுக்களை அளித்தனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெ ஜெயலலிதா, ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தல்களில், கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள், சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் இன்றும் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர். முதலமைச்சர் ஜெயலலிதா, தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டி ஏராளமானோர் விருப்ப மனு அளித்து வருவதோடு, முதலமைச்சர் ஜெயலலிதாவை மீண்டும் அரியணையில் அமர்த்திட சூளுரை மேற்கொண்டனர்.