முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சி : நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்டது

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சி : நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்டது

புதன், பெப்ரவரி 24,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் ஐந்தாண்டு கால சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் தொடங்கிவைக்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், மாணவ-மாணவியர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் முதலமைச்சர் செய்துள்ள மக்கள் நல திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படக் கண்காட்சியை ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, முதலமைச்சர் செல்வ ஜெயலலிதாவின் 68- வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட மக்கள் தொடர்புத் துறை சார்பில், திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே, முதலமைச்சரின் செயல் திட்டங்கள், சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் திருமதி.எ.சுந்தரவல்லி துவக்கி வைத்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரில், அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் முன்பு, மக்கள் தொடர்பு துறை சார்பாக புகைப்பட கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது. தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொடங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் திருமதி. எஸ். கோகுல இந்திரா, திருமதி. பா. வளர்மதி, துணை மேயர், தமிழ்நாடு ஜவுளி வாரியத் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர்.

தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், அங்குள்ள பேருந்து நிலையம் அருகில் கழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் திரு.கே.விவேகானந்தன், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.