தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது:பயனாளிகள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது:பயனாளிகள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி

சனி , ஜனவரி 09,2016,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் ஒருகோடியே 91 லட்சம் குடும்பங்களுக்கு 318 கோடி ரூபாய் செலவில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்ததையடுத்து, பல்வேறு மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு, சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஒருகிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத்துண்டு மற்றும் 100 ரூபாய் ரொக்கம் ஆகியன அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொண்ட பயனாளிகள், முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி தண்டையார்பேட்டை, சுந்தரம்பிள்ளை நகரில் நியாயவிலைக் கடையில் 2,070 பயனாளிகளுக்கு அமைச்சர்கள் திருமதி. பா. வளர்மதி, திருமதி எஸ். கோகுல இந்திரா ஆகியோர் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினர்.

தஞ்சையில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் டாக்டர் N. சுப்பையன் பொங்கல் பரிசுப்பொருட்களை வழங்கினார்.

இதேபோல் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழகம் முழுவதிலும் மக்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.