முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்த சிறப்பு பொங்கல் பரிசு:திருவள்ளூர் மாவட்டத்தில் 5 லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டது

முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்த சிறப்பு பொங்கல் பரிசு:திருவள்ளூர் மாவட்டத்தில் 5 லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டது

ஞாயிறு, ஜனவரி 10,2016,

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்த சிறப்பு பொங்கல் பரிசு 5 லட்சத்து 3 ஆயிரத்து 372 ரேஷன்கார்டுதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரை அடுத்த காக்களூர் சாலையில் அமைந்துள்ள மா.பொ.சி. நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை ரேஷன்கடையில் தமிழக முதல்–அமைச்சரின் ஆணைக்கிணங்க ரேஷன்கார்டு தாரர்களுக்கு சிறப்பு பொங்கல்பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு திருவள்ளூர் ஒன்றியக்குழு தலைவர் புட்லூர் ஆர்.சந்திரசேகர் தலைமை தாங்கினார். மணிமாறன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி மற்றும் திட்டக்குழு தலைவர் பா.ரவிச்சந்திரன், திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் அ.பாஸ்கரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.செந்தில்குமார், கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் கலந்து கொண்டு ரேஷன்கார்டுதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் நடத்தப்படும் 1,034 ரேஷன்கடைகள் மூலம் 5 லட்சத்து 3 ஆயிரத்து 372 ரேஷன்கார்டுதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் எஸ்.ஏ.நேசன், பூபாலன், கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.