முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்த விலையில்லா வேட்டி-சேலை திட்டம் : தமிழகம் முழுவதும் பயனாளிகளுக்கு வழங்கும் பணி தீவிரம்

முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்த விலையில்லா வேட்டி-சேலை திட்டம் : தமிழகம் முழுவதும் பயனாளிகளுக்கு வழங்கும் பணி தீவிரம்

ஞாயிறு, ஜனவரி 10,2016,

பொங்கல் திருநாளை முன்னிட்டு, முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்த, விலையில்லா வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தின்கீழ், தமிழகம் முழுவதும் பயனாளிகளுக்கு தொடர்ந்து வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 59 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பை அமைச்சர் திரு. ஓ. பன்னீர் செல்வம் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர், கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல், ஆர்.எம்.டி.சி. காலனி பகுதியில், நியாயவிலைக்கடை மூலம் 92 ஆயிரம் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுப் பைகளை அமைச்சர் திரு. நத்தம் ஆர். விசுவநாதன் வழங்கினார். நிகழ்ச்சியில், எம். உதயகுமார் எம்.பி., மாநகராட்சி மேயர், மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம், பாலப்பட்டு, ராயபுரம், வடக்கனந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல்பரிசுத் தொகுப்பினை அமைச்சர் திரு. ப. மோகன் வழங்கினார்.

நாகை மாவட்டத்தில், நாலரை லட்சம் குடும்பங்களுக்கு சிறப்புபொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதை தொடங்கி வைக்கும் விதமாக குத்தாலத்தில் அமைச்சர் திரு. கே.ஏ. ஜெயபால் பயனாளிகளுக்கு வழங்கினார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த 250 குடும்ப அமட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி-சேலைகள் மற்றும் பொங்கல் பரிசுப் பைகள் வழங்கப்பட்டன. இதில் அமைச்சர் திரு. P. பழனியப்பன், மாவட்ட ஆட்சியர், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெங்கடாசலபுரத்தில் உள்ள நியாயவிலைக்கடையில் ஆயிரத்து 800 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா வேட்டி-சேலைகள் மற்றும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை அமைச்சர் திரு. ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். இதேபோல் திருத்தங்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்து 463 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி சேலைகள் மற்றும் பொங்கல்சிறப்பு பரிசுத் தொகுப்பினை அமைச்சர் திரு. K.T. ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள, செங்கம்பட்டியில், 3,015 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பினை அமைச்சர் திரு. எடப்பாடி.கே. பழனிசாமி வழங்கினார்.

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவில்பாப்பாகுடி கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ஆயிரத்து 856 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பினை அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜூ வழங்கினார். இதில் டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு. எஸ்.டி.கே. ஜக்கையன், உடப்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி, கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தென்றல் நகர், முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விலையில்லா வேட்டி சேலைகள் 3,363 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு தலைமைக்கொறடா திரு. ஆர். மனோகரன் வழங்கினார்.

இதேபோல், மண்ணச்சநல்லூர் தொகுதியில் ஆயிரத்து 451 பயனாளிகளுக்கு பொங்கல்பரிசுத் தொகுப்பினை அமைச்சர் திரு.T.P. பூனாட்சி வழங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. டி. ரத்தினவேல், திரு. ஆர்.பி. மருதராஜா, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் நெல்லை டவுண் பகுதியில் ஆயிரத்து 450 பேருக்கு விலையில்லா வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. விஜிலாசத்தியானந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த வளர்புரம் பகுதியில் சிறப்புபொங்கல் பரிசு தொகுப்பு 694 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.