முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கையால், தூய்மையில் நம்பர் 1 மாநிலமாக மாறிவரும் தமிழகம்

முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கையால், தூய்மையில் நம்பர் 1 மாநிலமாக மாறிவரும் தமிழகம்

வியாழக்கிழமை, பிப்ரவரி 04, 2016,

தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நீர்நிலைகளை சீரமைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்தல், சூரிய மின்சக்தி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக போதுமான அளவு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுவதாக தமிழக சுற்றுச்சூழல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தற்போது உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், அதனை முழுமையாக பாதுகாப்பதில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு ஏராளமான திட்டங்களை தீட்டி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், மரங்களை வளர்த்தல், நீர்நிலைகளை தூர்வாரி பாதுகாத்தல், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்துதல் போன்ற முக்கிய பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த நான்கரை ஆண்டுகளில் சுமார் 220 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 600 கிலோமீட்டர் தொலைவுக்கு பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு தார்ச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் மேலாண் திட்டம் கொண்டுவரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் 18 இடங்களில் இப்பணியை மேற்கொண்டிருப்பதாக சுற்றுச்சூழல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், சோலைக்காடுகளை மறுஉற்பத்தி செய்தல், பள்ளிகளில் பசுமைதின கொண்டாட்டங்களை நடத்துதல் போன்ற ஏராளமான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுமட்டுமின்றி பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பிளாஸ்டிக் மறுசுழற்சி, சூரிய ஒளி மின் உற்பத்தி போன்றவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

தமிழக அரசின் இதுபோன்ற மிகச்சிறப்பான நடவடிக்கைகளால், பிற மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில் சுற்றுச்சூழல் சீர்கேடு மிகப்பெரிய அளவில் தடுக்கப்பட்டு, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மிளிர்கிறது.