முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி மாற்றுத் திறனாளி குழந்தைகள் சிறப்பு வழிபாடு

முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி மாற்றுத் திறனாளி குழந்தைகள் சிறப்பு வழிபாடு

சனி, அக்டோபர் 08,2016,

தூத்துக்குடி ; தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதா பூரண நலத்துடன் வீடு திரும்ப வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாநகர வடக்கு பகுதி அதிமுக சார்பில் தூத்துக்குடி சில்வர்புரத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்பி மக்கள் பணியாற்ற வேண்டி சிறப்பு கூட்டு வழிபாடு நடைப்பெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல முன்னாள் தலைவர் கோகிலா தலைமையில் நடைப்பெற்ற இந்த வழிபாட்டில் ஏராளமான மாற்றுத்திறனாளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.