முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி,அம்மா என்ற எழுத்து வடிவில் அமர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் சிறப்பு பிரார்த்தனை

முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி,அம்மா என்ற எழுத்து வடிவில் அமர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் சிறப்பு பிரார்த்தனை

ஞாயிறு, அக்டோபர் 16,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம்பெற வேண்டி, புதுக்கோட்டை அருகே பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண நலம்பெற வேண்டி, கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர், வழிபாடு மற்றும் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு, சிறப்பு வழிபாடு நடத்தினர். முதலமைச்சர் பரிபூரண நலம்பெற வேண்டி, மாணவ – மாணவிகள் உள்ளிட்டோர் அம்மா என்ற எழுத்து வடிவில் அமர்ந்து, மனமுருக பிரார்த்தனை மேற்கொண்டனர்.