முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் சிறப்பு வழிபாடு

முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் சிறப்பு வழிபாடு

வெள்ளி, அக்டோபர் 07,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றில் அ.இ.அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்ட ஜெ. ஜெயலலிதா பேரவை சார்பில் வி.கைகாட்டி பகுதியில் உள்ள அருள்மிகு மகாசக்தி மாரியம்மன் ஆலயத்தில் விளக்கு பூஜையும் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகரக்கழகம் சார்பில், விநாயகர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்ட கழக மீனவரணி சார்பில், நீலாங்கரை இஷ்டசித்தி விநாயகருக்கு 108 விளக்கேற்றி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.

காஞ்சிபுரம் மத்திய மாவட்டக்கழக ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், பெரும்பேர் கண்டிகை ஸ்ரீவள்ளி சமேத சம்ஹார சண்முகர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், அம்பத்தூர் பகுதி கழகம் சார்பில் அருள்மிகு முத்துமாரியம்மன், பக்த ஆஞ்சநேயர் திருக்கோவில் உள்ளிட்ட ஆறு திருக்கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் 108 தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மேலும் மண்ணூர்பேட்டை தேவலாயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றன.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள அழியாநிலையிலுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி சார்பில் அருள்மிகு வீரராகவ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜையும் தீபாராதனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருப்பதி திருமலை தேவஸ்தான பிரம்மோத்சவ விழாவிற்க்கு 10 டன் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

திருப்பூர் புறநகர் மாவட்டக்கழக ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், உடுமலை அருள்மிகு காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான தொண்டர்கள் தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் புனித ஞானபிரகாச ஆலயத்தில் சகாயமாதா நவநாள் திருப்பலியும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டக்கழகம் சார்பில், பனிமயமாதா ஆலயத்தில் மலர்மாலை அணிவித்து சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரக்கழகம் சார்பில், புதுக்கிராமம் சக்தி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமிய பள்ளி மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையில் பதாகைகள் ஏந்தி சிறப்பு பிரார்தனை மேற்கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில், பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டக் கழகம் சார்பில் ராமநாதசுவாமி கோயலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்டக்கழக ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், திருவக்கரை வக்ரகாளியம்மன் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆர்ப்பாக்கத்திலுள்ள அருள்மிகு காளியம்மன் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகமும், 108 தேங்காய்கள் உடைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியக்கழகம் சார்பில், பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், ஆரோக்கியமாதா ஆலயத்தில் கூட்டுப்பிரார்தனையும் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டக்கழகம் சார்பில், முத்துமாரியம்மன் திருக்கோல் மற்றும் துர்க்கையம்மன் திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நாகை மாவட்டம், திருவிழந்தூர் பரிமளரெங்கநாதர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெற்றன. நாகூரில் உள்ள சில்லடி தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றன. ஏராளமான கழக தொண்டர்களும், இஸ்லாமியர்களும் பங்கேற்று பிரார்தனை செய்தனர்.

திருச்சி மாநகர் மாவட்டக்கழகம் சார்பில், சங்கிலியாண்டபுரம் செல்வகாளியம்மன் ஆலயத்தில் அஷ்டோத்திரம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

திருச்சி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

ஈரோடு மாநகர் மாவட்டக்கழக ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், காசிப்பாளையம் முருகன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதி சார்பில், திண்டல் அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு பிரார்தனைகள் நடைபெற்றன.

தேனியிலுள்ள அருள்மிகு பாலமுருகன் திருக்கோயிலில் மிருத்துஞ்சய ஹோமம் நடைபெற்றது.

மதுரை புறநகர் மாவட்டக்கழகம் சார்பில், சர்வசமய கூட்டுப் பிரார்தனை நடைபெற்றது. திருப்பலி மற்றும் சிறப்பு துஆ, வேதமந்திரங்கள் முழுங்க சிறப்பு கூட்டுப்பிரார்தனைகள் நடைபெற்றன. ஏராளமான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.

மதுரை மாநகர் மாவட்டக்கழகம் சார்பில், பழைய குயவர்பாளையம் பகுதியிலுள்ள சங்கையா மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு மலர்களால் மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தஞ்சை தெற்கு மாவட்டம், பேராவூரணி ஒன்றியக்கழகம் சார்பில், செல்வ விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பில், பிரம்மபுரம் பகுதியில் உள்ள ஆயிரத்து 210 அடி உயரத்தில் சஞ்சீவிராயர் மலையிலுள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர் மாவட்டக்கழகம் சார்பில், மீனாட்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு லட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு புனிதசவேரியார் பேராலயத்தில், மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்தனை மேற்கொண்டனர்.

இதேபோன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான கழக தொண்டர்களும், பொதுமக்களும் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டு வருகின்றனர்.