முதலமைச்சர் ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து 28 அமைச்சர்களும் குழுவாக பதவி ஏற்பு

முதலமைச்சர் ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து 28 அமைச்சர்களும் குழுவாக பதவி ஏற்பு

திங்கள் , மே 23,2016,

ஜெயலலிதா 6-வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக இன்று பதவியேற்றதைத் தொடர்ந்து, அவரது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 28 அமைச்சர்களுக்கு, ஆளுநர் டாக்டர் கே.ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற் றனர். ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி கே.பழனிச்சாமி, செல்லூர் கே.ராஜு, தங்க மணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக் குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், டாக்டர் சரோஜா, கருப்பண்ணன், எம்.சி.சம்பத், காமராஜ், ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், டாக் டர் சி.விஜயபாஸ்கர், எஸ். பி.சண்முகநாதன், துரைக் கண்ணு, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயக்குமார், கே.டி. ராஜேந்திரபாலாஜி, கே.சி. வீரமணி, பெஞ்சமின், வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி, ராஜலட்சுமி, டாக்டர் மணிகண்டன், கரூர் விஜயபாஸ்கர் ஆகிய 28 பேரும் குழு, குழுவாக பதவியேற்றனர். கவர்னர் ரோசய்யா அவர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.

14 அமைச்சர்களாக இரண்டு பிரிவாக பிரிந்து குழுவாக பதவி ஏற்று கொண்டனர்