முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு , 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்:அமைச்சர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்

முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு , 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்:அமைச்சர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்

செவ்வாய்கிழமை, பிப்ரவரி 16, 2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதிலும் 68 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டம் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் முதலமைச்சர் ஆலமரக்கன்றை நட்டு இத்திட்டத்தை தொடங்கி வைத்ததை அடுத்து, பல்வேறு மாவட்டங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை குறிக்கும் வகையில், பெருநகர சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று ஆலமரக்கன்றை நட்டு மாபெரும் மரம் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் 68 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்ட வனத்துறை அலுவலக வளாகத்தில் வனத்துறை சார்பில், மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் திரு.கே.சி. வீரமணி நிகழ்ச்சியில் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டுவைத்தார். நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செங்குட்டுவன், மாநகராட்சி மேயர் திருமதி கார்த்தியாயிணி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் பட்டாம்பூச்சி பூங்காவில் நடைபெற்ற மரம் நடும் விழாவில், முதலமைச்சரின் பிறந்த நாளையொட்டி, அமைச்சர் திரு.T.P. பூனாட்சி, அரசு தலைமைக் கொறடா திரு.ஆர். மனோகரன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு, விழாவை தொடங்கி வைத்தனர். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், வனத்துறை அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முதலமைச்சரின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 2 லட்சத்து 19 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர் திரு. நத்தம் ஆர். விசுவநாதன் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம். உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நாமக்கல் மாவட்ட வனத்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் திரு. P. தங்கமணி பங்கேற்று, 68 மரக்கன்றுகளை நட்டு மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.P.R. சுந்தரம், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், வனத்துறை அலுவலர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மரக்கன்றுகளை அமைச்சர் திரு. ஆர்.வைத்திலிங்கம் நட்டு வைத்து, மரம் நடும் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கு. பரசுராமன், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில், மாவட்டம் முழுவதிலும் 2 லட்சத்து 19 ஆயிரத்து 350 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, மரக்கன்றுகளை நட்டு அமைச்சர் திரு. ப. மோகன் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் லட்சுமணன், திரு. எஸ்.ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 350 மரக்கன்றுகள் நடும் பணிகளை அமைச்சர் திரு.S.P. சண்முகநாதன் தொடங்கி வைத்தார். இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைச்சர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் மரக்கன்றுகளை நட்டு, மாவட்ட அளவில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 350 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர், நகர்மன்றத் தலைவர் மற்றும் பொதுமக்கள், கழக நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், மாவட்டம் முழுவதிலும் 2 லட்சத்து 19 ஆயிரத்து 350 மரக்கன்றுகள் நடும் பணிகளை மாநிலங்களவை அ.இ.அ.தி.மு.க. குழு துணைத் தலைவர் திரு. முத்துக்கருப்பன் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.கே.ஆர். பி. பிரபாகரன், திருமதி வசந்தி முருகேசன், மேயர், துணை மேயர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.