முதலமைச்சர் ஜெயலலிதா முழு உடல் நலத்துடன் வீடு திரும்புவார், இடைக்கால முதலமைச்சர் தேவையில்லை : வைகோ

முதலமைச்சர் ஜெயலலிதா முழு உடல் நலத்துடன் வீடு திரும்புவார், இடைக்கால முதலமைச்சர் தேவையில்லை : வைகோ

ஞாயிறு, அக்டோபர் 09,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா முழு உடல் நலத்துடன் வீடு திரும்புவார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.தமிழகத்துக்கு இடைக்கால முதலமைச்சர் என யாரையும் நியமிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ  மருத்துவர்களிடம் நேற்று நேரில் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்ளிடம் பேசிய வைகோ, முதலமைச்சர் நலமாக உள்ளார். அதிமுக தொண்டர்களின் கவலை நீங்கும். அவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்புவார்.. முதலமைச்சருக்கு சிகிச்சை அளித்து வரும் லண்டன் மருத்துவர் ரிச்சர்டை சந்தித்தேன். அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்தேன். முதலமைச்சர் ஜெயலலிதா முழு உடல் நலம்  பெற இயற்கை அன்னையின் அருளை யாசிக்கிறேன் என்று வைகோ தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, மதிமுக பொது செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது,முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைந்து வருவதால் பொறுப்பு மற்றும் இடைக்கால முதலமைச்சர் என யாரையும் நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் வைகோ தெரிவித்தார்.