முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக, இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 126 தமிழக மீனவர்கள் – இன்று தாயகம் வருகை

முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக, இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 126 தமிழக மீனவர்கள் – இன்று தாயகம் வருகை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 126 தமிழக மீனவர்கள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இன்று தாயகம் திரும்புகின்றனர்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்படுவதால், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டி, பிரதமருக்கு தொடர்ச்சியாக கடிதம் எழுதி வருகிறார். இந்த நிலையில், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 126 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை விடுவிக்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இடைவிடாது மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து மத்திய அரசு தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் பலனாக இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் அனைவரும் கடந்த சில தினங்களுக்கு முன் விடுவிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இம்மீனவர்கள் இன்று தமிழக மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். அவர்களில் 78 பேர் இன்று காரைக்கால் துறைமுகத்தை வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, மீனவ சங்கப் பிரதிநிதிகளும், உறவினர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.