முதலமைச்சர் ஜெயலலிதா விரைவாக குணமடைந்து வருகிறார் : புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவாக  குணமடைந்து வருகிறார் : புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி

திங்கள், அக்டோபர் 10,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 22ந் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அப்பல்லோ மருத்துவ மனையில் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து இன்று மருத்துவர்களிடம் நேரில் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைந்து வருவதாக மருத்துவர்கள்  தெரிவித்தனர். மேலும் அப்பல்லோ நிறுவன தலைவர் மருத்துவர் பிரதாப் ரெட்டி முதலமைச்சருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி  தம்மிடம் விளக்கினார் என்றும் கிரண்பேடி தெரிவித்தார்.