முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி கரூரில் அதிமுக.வினர் வேள்வி நடத்தி வழிபாடு

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி கரூரில் அதிமுக.வினர் வேள்வி நடத்தி வழிபாடு

வியாழன் , அக்டோபர் 06,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எற்பட்ட உடல் நலக்குறைவு காரணமா கடந்த 22ந் தேதி இரவு முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிசிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுக கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பல்வேறு கோவில்களில் சிறப்பு பிராத்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப  வேண்டி கரூர் மாவட்ட அதிமுக.வினர் வேள்வி நடத்தியும் கோவில்களில் சிறப்பு அபிசேகங்கள் செய்தும்  வழிபாடு செய்தனர்.

கரூரில் வெங்கமேடு அருகில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், கரூர் நகர அதிமுக கழகம் சார்பில் தன்வந்திரி,மிருந்தஞ்சி,பஞ்சசுத்திரம் உள்ளிட்ட பல்வேறு வேள்விகள் மற்றும் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் முதலமைச்சர் நலமுடன் வீடு திரும்ப  வேண்டி வழிபாடு செய்தனர்.

கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற இந்த  வேள்வி மற்றும் பூஜையில் அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.