முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு,கோவையில் 68 ஜோடிகளுக்கு சீர்வரிசைகளுடன் திருமணம்

முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு,கோவையில் 68 ஜோடிகளுக்கு சீர்வரிசைகளுடன் திருமணம்

புதன், பெப்ரவரி 17,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா 68-வது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.க. சார்பில், 68 மணமக்களுக்கு திருமணம் சிறப்பாக நடத்தி வைக்கப்பட்டது. முதலமைச்சரின் வாழ்த்து மடல் வாசிக்கப்பட்டு, மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு, கழகத்தின் பல்வேறு அமைப்புகளும் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். கோவை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், கோவை குனியமுத்தூர் பகுதியில் 68 ஜோடிகளுக்கு திருமணம் இன்று நடத்தி வைக்கப்பட்டது. முதலமைச்சரின் வாழ்த்து மடலை அமைச்சர் திரு. S.P. வேலுமணி வாசித்தார்.

இதனைத்தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க, திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மணமக்களுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது. மணமக்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு அறுசுவை உணவு விருந்தாக அளிக்கப்பட்டது. இந்த திருமண நிகழ்ச்சியில், அமைச்சர் திரு. எடப்பாடி. கே. பழனிசாமி, கழக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.