முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, ஜெயா தொலைக்காட்சி 5 கோடி ரூபாய் வழங்கியது

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, ஜெயா தொலைக்காட்சி 5 கோடி ரூபாய் வழங்கியது

திங்கள் , டிசம்பர் 14,2015,

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, ஜெயா தொலைக்காட்சி மற்றும் முருகப்பா குழுமம் சார்பில் தலா 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவிடம், சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, ஜெயா தொலைக்காட்சியின் சார்பில் திருமதி. பிரபா சிவகுமார், 5 கோடி ரூபாய் வழங்கினார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம், முருகப்பா குழும நிறுவனத்தின் செயல் தலைவர் திரு. ஏ. வெள்ளையன், 5 கோடி ரூபாய் வழங்கினார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, இதுவரை, 96 கோடியே 53 லட்சத்து 67 ஆயிரத்து 634 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசின் செய்திக்கு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.