முதல்வருடைய நல்ல மனசுக்கு, அவருக்கு எதுவும் ஆகாது – அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்’’ ; விஜயசாந்தி

முதல்வருடைய நல்ல மனசுக்கு, அவருக்கு எதுவும் ஆகாது – அவர்  விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்’’ ; விஜயசாந்தி

சனி, நவம்பர் 05,2016,

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க நேற்று நடிகை விஜயசாந்தி மருத்துவமனைக்கு  வந்தார்.

பின்னர் வெளியில் வந்த விஜயசாந்தி, செய்தியாளர்களிடம் கூறும்போது;

மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். முதல்வர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், பயப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தனர் என்றும் ,‘‘முதல்வருடைய நல்ல மனசுக்கு, அவருக்கு எதுவும் ஆகாது. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்’’ என்றும் விஜயசாந்தி கூறினார்.

மேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்”  இந்த லிங்கை கிளிக் செய்யவும்.