முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர், ஜெயலிதா போல் தைரியமுடன் செயல் பட்டால் 3 ஆண்டுகளில் தி.மு.க. காணாமல் போகும் : பொன்.ராதாகிருஷ்ணன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர், ஜெயலிதா போல் தைரியமுடன் செயல் பட்டால் 3 ஆண்டுகளில் தி.மு.க. காணாமல் போகும் : பொன்.ராதாகிருஷ்ணன்

ஜூன் 19, 2017,திங்கள் கிழமை, 

வேலூர் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி முந்தைய முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போல் தைரியமாக செயல்பட வேண்டும் அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 3 ஆண்டுகள் நீடித்தால் தி.மு.க. காணாமல் போய்விடும் என மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மத்திய பாரதீய ஜனதா அரசின் 3 ஆண்டு சாதனைகள் மற்றும் அனைவரும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி விழா வேலூர் ரங்காபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. சென்னை எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகம் நிறுவனம் சார்பில் இந்த விழா நடந்தது.இதில் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, மத்திய அரசின் 3 ஆண்டு சாதனைகள் குறித்த காணொலி காட்சியை தொடங்கி வைத்து பேசினார்.

இதைத்தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜ.க.வை பொறுத்தவரை ஆட்சி கலைப்பில் விருப்பம் இல்லை. அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால் தி.மு.க. சரிவை சந்தித்து வருகிறது. தமிழகத்தில் இவ்வளவு அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தி.மு.க.வில் யாரும் சேரவில்லை.காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போன்று தற்போதைய முதலமைச்சர்கள் வேகமாகவும், துணிச்சலாகவும் செயல்பட வேண்டும். அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 3 ஆண்டுகள் நீடித்தால், தி.மு.க. காணாமல் போய் விடும்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.