முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் நேரில் ஆதரவு

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் நேரில் ஆதரவு

ஞாயிறு, பிப்ரவரி 12, 2017,

சென்னை ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக மூத்த தலைவர் பொன் னையன் ஆதரவு தெரிவித்தார். அப்போது, ‘தொகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று எம்எல்ஏக் கள் செயல்பட வேண்டும்’ என அவர் கேட்டுக்கொண்டார்.

எம்ஜிஆர் காலத்தில் அமைச்ச ராக இருந்தவர் பொன்னையன். இவரை அதிமுக செய்தித் தொடர்பாளராக ஜெயலலிதா நியமித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலாவை தீவிர மாக ஆதரித்தவர்களில் பொன்னை யனும் ஒருவர். இந்நிலையில், நேற்று மாலை திடீரென முதல்வர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர், நிருபர்களி டம் பொன்னையன் கூறியதாவது:

ஜெயலலிதா மருத்துவமனை யில் இருந்தபோது அவர் நலம் பெற வேண்டும் என அதிமுக வினர், பொதுமக்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்தனர். நானும் மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறிய தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்து வந்தேன். மருத்துவமனையில் சசிகலாவைத் தவிர, வேறு யாரும் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை.

இந்த நேரத்தில் அதிமுக தொண் டர்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். ஜெயலலிதாவின் பொற் கால ஆட்சி தொடர வேண்டும். அதிமுக சட்ட திட்டப்படி 1.64 கோடி தொண்டர்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ, அவர்களே பொதுச் செயலாளராக முடியும். அவரைத் தவிர வேறு யாரும் பொதுச்செயலாளராக வர முடியாது. தொகுதி மக்களின் வேண்டு கோளை ஏற்று எம்எல்ஏக்கள் செயல்பட வேண்டும்.

ஊடகங்கள் நல்ல கருத்துகளை பரப்பி வருகின்றன. இந்த ஆக்கப்பூர்வ மான உண் மைகளை உள்வாங்கிக் கொண்டு செயல்படுத்த வேண்டி யது கட்சித் தலைமையின் தார்மீக பொறுப்பாகும். ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்டவர் பன்னீர் செல்வம் மட்டும்தான். அண்ணா போல், எளிமையாக செயல் படக்கூடியவர்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசை இணங்கவைத்தார். இதன்மூலம் மக்களின் செல்லப் பிள்ளையாக ஆனார்.பல்வேறு திட்டங்களை அவர் செயல்படுத்தியுள்ளார். நேர்மையான தூய்மையான ஆட்சியை தந்துள்ளார். ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்ட பன்னீர்செல்வத்தின் கீழ் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு பொன்னயன் கூறினார்.