முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி,தமிழகத்தில்1061 இடங்களில் இலவசமாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி,தமிழகத்தில்1061 இடங்களில் இலவசமாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

புதன்,நவம்பர்,25-2015

தமிழகத்தில் மழைக்கால காய்ச்சலை தடுக்க 1061 இடங்களில் இலவசமாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி, பொதுமக்களுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களை கட்டுப்படுத்த மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களில் சித்த மருத்துவ பிரிவின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1061 இடங்களில் 25.ம்தேதி முதல் 29.ம்தேதி வரை 5 நாட்களுக்கு பொதுமக்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
9 வகையான மூலிகை கலந்த நிலவேம்பு குடிநீர் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் வராமல் தடுக்கிறது. பெரியவர்கள் 30 மி.லி முதல் 50 மி.லி வரையும், 1 முதல் 12 வயது வரை உள்ளவர்கள் 10 மி.லி வரையும் 5 நாட்களுக்கு தினசரி அருந்த வேண்டும்.
அனைத்து பொதுமக்களும் தங்கள் அருகில் உள்ள அரசு சித்த மருத்துவப் பிரிவுகள் மற்றும் மழைக்கால சிறப்பு முகாம்களில் நிலவேம்பு குடிநீரை இலவசமாக பருகி காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்களிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளுமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.