முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய திட்டமான திருமண நல உதவித் திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்தில் 48,000 பேருக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்க பட்டுள்ளது

முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய திட்டமான திருமண நல உதவித் திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்தில் 48,000 பேருக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்க பட்டுள்ளது

செவ்வாய், மார்ச் 22,2016,

ஏழை எளிய பெண்கள் பயனடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் சீரிய திட்டமான தாலிக்குத் தங்கம் மற்றும் திருமணநிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், வேலூர் மாவட்டத்தில் மட்டும் 195 கோடி ரூபாய் மதிப்பில், சுமார் 48 ஆயிரம் பெண்கள் பயனடைந்துள்ளனர்.

மக்கள் நலன் ஒன்றையே தனது குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து வரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். இத்திட்டங்களுக்கெல்லாம் முத்தாய்ப்பாக ஏழை எளிய பெண்களுக்கு திருமாங்கல்யத்திற்கு தங்கம் மற்றும் திருமணநிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12-ம் வகுப்பு வரை படித்த ஏழை பெண்களுக்கு திருமணநிதியுதவியாக 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும், 4 கிராம் தாலிக்குத் தங்கமும் வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படித்த ஏழை பெண்களுக்கு திருமணநிதியுதவியாக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும், 4 கிராம் தாலிக்குத் தங்கமும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் மட்டும், 195 கோடி ரூபாய் மதிப்பில், 47 ஆயிரத்து 259 பெண்களுக்கு, தாலிக்குத் தங்கம் மற்றும் திருமணநிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் பயனடைந்துள்ள பெண்கள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.