முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களால் கிராமங்கள் தன்னிறைவு – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பெருமிதம்

முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களால் கிராமங்கள் தன்னிறைவு – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பெருமிதம்

ஞாயிறு, டிசம்பர் 27,2015,

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலிதாவின் திட்டங்களால் தான் கிராமங்கள் எல்லாம் தன்னிறைவு பெறுகின்றன.என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி  பேசினார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வடபட்டி கிராமத்தில் நேற்று நடைபெற்ற விலையில்லாவெள்ளாடுகள் செம்மறியாடுகள் வழங்கும் விழாவில்செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள்செயலாக்கத்துறை அமைச்சர் .கே.டி.ராஜேந்திரபாலாஜி தலா 4 ஆடுகள் வீதம் ரூ.6 லட்சத்து 32ஆயிரத்து 100 மதிப்பில் 49 பயனாளிகளுக்கு விலையில்லா வௌ்ளாடுகள் செம்மறியாடுகள் வழங்கி, வடபட்டிஊராட்சியில் தமிழக முதலவர் அவர்களின் உத்தரவுப்படி தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகத்தைதிறந்து வைத்து பேசியதாவது:-

கிராமப்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களின்பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையிலும், அவர்களின் இன்னல்களை களைவதற்காகவும், அவர்களின்  கண்ணீரை துடைப்பதற்காகவும் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் விலையில்லா வெள்ளாடு ஃ செம்மறி ஆடுகள்மற்றும் கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் கிராமங்களில் வாழும் ஏழை தாய்மார்களின்குடும்பத்திற்கு 3 பெட்டை ஆடுகளும், 1 ஆண் ஆடும் மொத்தம் 4 வௌ;ளாடு ஃ செம்மறி ஆடுகளும் வழங்கப்பட்டுவருகிறது. மேலும், கால்நடை பராமரிப்புத்துறையின் சாரபில் கால்நடை மருத்துவர்கள் அடங்கிய பணியாளர்கள்குழுவின் மூலமாக கால்நடை சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விலையில்லா ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம்,தடுப்பூசிகள் போடப்பட்டு தொடர் கண்காணிப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விலையில்லாஆடுகள், கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற்ற அனைத்து கிராம பயனாளிகளின் பொருளாதாரநிலை மேம்பாடு அடைந்துள்ளது.கிராமங்கள் தான் நாட்டின் அடிப்படை என்பதை நன்கு அறிந்த முதலமைச்சர் அம்மாஏழை எளிய மக்கள், விவசாயிகள் பயன்பெறும் வகையில் கால்நடைத்துறையின் மூலம் பால் உற்பத்தியைபெருக்கி வெண்மைப்புரட்சியை ஏற்படுத்தவும், கிராமப்புற பெண்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கவும் பல்வேறுசிறப்பான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலிதாவின் திட்டங்களால் தான் கிராமங்கள் எல்லாம் தன்னிறைவு பெறுகின்றன.

வடபட்டி பகுதிகளைச் சுற்றி கால்நடை வளர்ப்பு அதிகம் உள்ளது. அவைகளின் நலன் கருதி வடபட்டிசெயல்பட்டு வந்த கால்நடை கிளை நிலையம், முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க புதிதாக கால்நடை மருத்துவர் நியமிக்கபட்டு, கால்நடை மருந்தகமாக தரம்உயர்த்தப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடபட்டி பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்றுசட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பில் திருமண மண்டபம் கட்டும்பணி நடைபெற்றுவருகிறது. பொது மக்கள் தங்களுக்குத்தேவையான் அரசு நலத்திட்டங்களைப் பெற தொடர்புடைய ஆவணங்களைஇணைத்து மனுக்களாக அளித்தால் அம்மனுக்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான நபர்களுக்குஉடனடியாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். அரசின் பல்வேறு சிறப்பான திட்டங்கள் மூலம் பயன்பெறும்பயனாளிகள், இதனை நன்கு பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தையும், குடும்ப பொருளாதாரத்தையும்பெருக்கிக் கொள்ள வேண்டும். தாயுள்ளம் கொண்ட முதல்வர்ஜெயலலிதாவுக்கு நாம்என்றென்றும் நன்றிக்கடன்பட்டவா;களாக இருக்க வேண்டும், அதற்கு வாய்ப்பாக வருகின்ற காலங்களில்முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் – என அமைச்சா;.கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் எம்.பி.டி.ராதாகிருஷ்ணன், மண்டல இணைஇயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) .ஆர்.சுகுமாரன், சிவகாசி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்.சி.சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வி.ஆர்.கருப்பசாமி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்முத்துராஜ், உதவி இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை).கார்த்திகேயன், வடபட்டி பகுதி உதவிமருத்துவர் சுப்பிரமணியன், ஊராட்சி மன்றத்தலைவர் வைரம் கருணாகரன், உட்பட உள்ளாட்சிப்பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொணடனர்.