முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களால் தமிழகத்தில் பெண்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது :அமைச்சர் கடம்பூர் ராஜூ

முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களால் தமிழகத்தில் பெண்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது :அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஞாயிறு, நவம்பர் 13,2016,

முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களால் தமிழகத்தில் பெண்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. பெண்கள் பற்றிய பாரதியின் கனவை நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா, என திருப்பரங்குன்றம் தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

அதிமுக வேட்பாளர் ஏ.கே.போசை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தென் மாவட்டங்களை சேர்ந்த அக் கட்சியினர் திருப்பரங்குன்றம் தொகுதியில் குவிந்துள்ளனர். அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண் டியன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் என்.சின்னத்துரை மற்றும் அக்கட்சியினர் நெடுமதுரை ஊராட்சிக்குட்பட்ட நெடுமதுரை, கல்லுபட்டி கிராமத்தில் நேற்று பிரச்சாரம் செய்தனர்.

அப்போது வயல் வெளிகளில் பணிபுரிந்த ஆண்கள், பெண்களிடம் சென்று அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி ஆதரவு திரட்டினர். நெடுமதுரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பிரச்சாரம் செய்த அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசி யதாவது:

உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் பெண்கள் சமுதாயத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா திட்டங்களை வாரி வழங்கியுள்ளார்.

பாரதி கனவை நனவாக்கும் வகையில் பெண் கமோண்டோ படைகள், மகளிர் காவல்நிலையங்கள், தற்போது பெண்களின் வேலைபளுவை குறைக்கும் வகையில் தாய் வீட்டு சீதனம்போல் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி, ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம் எண்ணற்ற திட்டங்களை சொல்லலாம். முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களால் இன்று பெண்கள் வாழ்க்கை தரம் தமிழகத்தில் உயர்ந்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.