முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கையால் 287 தமிழர்கள் விடுதலை: குடும்பத்தினர் முதலமைச்சருக்கு கண்ணீர்மல்க நன்றி

முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கையால் 287 தமிழர்கள் விடுதலை: குடும்பத்தினர் முதலமைச்சருக்கு கண்ணீர்மல்க நன்றி

வியாழன் , பெப்ரவரி 25,2016,

முதலமைச்சர்  ஜெயலலிதா மேற்கொண்ட, தீவிர நடவடிக்கைகளின் பயனாக, ஆந்திர மாநில சிறைகளில் இருந்த 288 தமிழர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். தாங்கள் விடுதலை செய்யப்பட மிகுந்த முயற்சி மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, விடுவிக்கப்பட்ட 288 தமிழர்களும், அவர்களது குடும்பத்தினரும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர். முதலமைச்சரின் பிறந்த நாளான இன்று விடுதலை செய்யப்பட்டது, தங்களை இரட்டிப்பு மகிழ்ச்சி அடையச் செய்ததாக அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

ஆந்திரச் சிறைகளில் உள்ள தமிழர்களை சட்டவிதிகள்படி உடனடியாகப் பிணையில் விடுவிக்கவும், அவர்களது வறிய நிலையை கருத்தில் கொண்டு வழக்குகளை நடத்த போதிய இலவச சட்ட உதவிகளை வழங்கவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
இதன்படி, சிறையில் உள்ளோரின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து மாவட்ட ஆட்சியர்களால் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் ஆந்திர மாநில சட்ட உதவி ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வழக்குகளை நடத்த 2 அரசு வழக்குரைஞர்களும், வழக்கு செலவுக்காக முன்பணமாக ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன் காரணமாக, ஆந்திரச் சிறைகளில் இருந்த 172 தமிழர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், 2013-ஆம் ஆண்டில் சேஷாசல வனப் பகுதியில் செம்மரக் கடத்தல், கொலைக் குற்றங்கள் உள்ளிட்டவை தொடர்பாக 287 தமிழர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இவை திருப்பதியில் உள்ள 3-ஆவது கூடுதல் குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன.
20 அமர்வுகளில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணைகளில், தமிழக அரசு வழக்குரைஞர்களுடன் திருப்பதியைச் சேர்ந்த வழக்குரைஞர்களுடன் இணைந்து வாதிட்டனர்.
இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 288 தமிழர்களும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கு முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கையே காரணம் என்று தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.