முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாசியுடன் அதிமுக சார்பில் தஞ்சையில் 164 ஜோடிகளுக்கு திருமணம்

முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாசியுடன் அதிமுக சார்பில் தஞ்சையில் 164 ஜோடிகளுக்கு திருமணம்

வெள்ளி, பெப்ரவரி 26,2016,

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகராட்சி திடலில், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் ஜெயலலிதாவின் நல்லாசியுடன் 164-ஜோடிகளுக்கு பசுவும் கன்றும் வழங்கி 68 வகையான சீர்வரிசையுடன் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. சிறப்புற வாழ மணமக்களை முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தினார்.

முதல்வர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் 8-வது ஆண்டாக அவரது நல்லாசியுடன் ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்த 164 ஜோடி மணமக்களுக்கு திருமணம் தஞ்சாவூர் மாநகராட்சி திடலில் வெகு விமரிசையாக கழக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் திருமண நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து 164 ஜோடி மணமக்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்.

அமைச்சர் வைத்திலிங்கம் மணமகன் கையில்  மாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து  கெட்டிமேளம் முழங்க திருமணம் நடைபெற்றது.

அமைச்சர் வைத்திலிங்கம் 164 ஜோடி மணமக்களுக்கு 4 கிராம் தங்கதாலி, மணமகளுக்கு பட்டுப்புடவை, மணமகனுக்கு பட்டுவேட்டி சட்டை, பசுமாடும் கன்றும், கட்டில் மெத்தை என 68 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

அமைச்சர் வைத்திலிங்கம் மணமக்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, மணமக்களுக்கு அளித்த வாழ்த்து மடலை அமைச்சர் வைத்திலிங்கம் வாசித்தார்.