முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு,பிப்ரவரி 23 முதல் 29-ஆம் தேதி வரை 13 சிறப்பு தாய்சேய் நலன் மருத்துவ முகாம்கள்

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு,பிப்ரவரி 23 முதல் 29-ஆம் தேதி வரை 13 சிறப்பு தாய்சேய் நலன் மருத்துவ முகாம்கள்

செவ்வாய், பெப்ரவரி 23,2016,

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி குடும்ப நலத் துறை சார்பில் பிப்ரவரி 23 முதல் 29-ஆம் தேதி வரை 13 சிறப்பு தாய்சேய் நலன் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.
இந்த முகாம்களில் சர்க்கரை நோய், ரத்த சர்க்கரை அளவு, சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்கான பரிசோதனை, ரத்த அழுத்தம், இருதய நோய், ஈ.சி.ஜி., எக்கோ, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கண் பார்வை குறைவு, மற்ற நோய்களுக்கான ஸ்கேன் (அல்ட்ரா சவுண்ட்), தாய்மார்களுக்கான ஸ்கேன் (அல்ட்ரா சவுண்ட்), காய்ச்சல், மூட்டுவலி மற்றும் உடல்சோர்வு, இரத்த சோகை, கண்புரை நோய், தோல் வியாதிகள், மலேரியா, காசநோய், காது மூக்கு தொண்டை, குழந்தை நலம் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
மேலும், உயர் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் கண்டறியப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, கர்ப்பிணிகளுக்கு முழு பேறுகால பரிசோதனை, தடுப்பூசி, ரத்தம் மற்றும் முழு ஆய்வகப் பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, 5 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கான சிறப்பு பரிசோதனை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் பதிவு செய்தல், மருத்துவ நிபுணர்களின் பேறுகால பராமரிப்பு குறித்த தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், சிறப்பு கவனம் தேவைப்படும் தாய்மார்களுக்கு உடன் மருத்துவ உயர் சிகிச்சைக்கு பரிந்துரைத்தல் ஆகியனவும் நடைபெறுகின்றன.