முதல்வர் ஜெயலலிதாவின் மன உறுதி மற்றும் திடமான செயல் பாட்டினால் தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறியுள்ளது கவர்னர் உரையில் ஆளுநர் ரோசய்யா பாராட்டு

முதல்வர்  ஜெயலலிதாவின் மன உறுதி மற்றும் திடமான செயல் பாட்டினால்  தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறியுள்ளது கவர்னர் உரையில் ஆளுநர் ரோசய்யா பாராட்டு

புதன், ஜனவரி 20,2016,

14-வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரையில் தமிழக அரசின் வெள்ள நிவாரண பணிக்கு ரோசய்யா பாராட்டு தெரிவித்தார். மாநிலத்தில், சட்டம் ஒழுங்கு முழுமையாக நிலைநாட்டப்பட்டுள்ளதால் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த அமைதிப் பூங்காவாகத் தமிழகம் மாறியுள்ளது. என பாரட்டினார்.

உரையின் முக்கிய அம்சங்கள்:

* தமிழகத்தில் பல வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

* வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 36,840 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

* பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்பட்டது.

* தமிழக அரசு மக்கள் நல அரசாக உருவெடுத்துள்ளது

* ஒரே நாளில் பெய்த மழையால் சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டது.

* வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் அமைச்சர்கள், அதிகாரிகள் குழு நிவாரணப் பணியில் ஈடுபட்டது.

* மாநில அரசின் நடவடிக்கையால் தொற்றுநோய் பரவாமல் தடுக்கப்பட்டது.

* மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

* வெள்ள பாதிப்புக்கு முதற்கட்டமாக ரூ.1000 கோடி நிதி வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி.

* காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு தாமதம் இன்றி அமைக்க வேண்டும்.

* மாநிலத்தில், சட்டம் ஒழுங்கு முழுமையாக நிலைநாட்டப்ட்டுள்ளதால் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த அமைதிப் பூங்காவாகத் தமிழகம் மாறியுள்ளது.

* குற்றச் செயல்கள் செய் பவர்களை கடுமையாகக் கையாள காவல்துறைக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதால், காவல் துறை யினரின் ஊக்கம், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

* மாநிலக் காவல்துறையின் தொடர் கண்காணிப்பு, உறுதியான நடவடிக்கை, ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவற்றின் மூலமாக சமூகவிரோத சக்திகள் ஒடுக்கப்பட்டு அனைத்து வகையிலான தீவிரவாதங் களும் தடுக்கப்பட்டுள்ளன.

* முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மன உறுதி மற்றும் திடமான செயல் பாட்டினால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. நமது மாநிலக் காவல்துறை தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு, மக்களின் மனதில் நம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும் உருவாக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு ஆளுநர் ரோசய்யா கூறினார்.