முதல்வர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளையொட்டி போயஸ் தோட்ட இல்லத்தில் அலைகடலெனத் திரண்ட கழகத் தொண்டர்கள்:பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாட்டம்

முதல்வர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளையொட்டி போயஸ் தோட்ட இல்லத்தில் அலைகடலெனத் திரண்ட கழகத் தொண்டர்கள்:பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாட்டம்

புதன்கிழமை, பிப்ரவரி 24, 2016,

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளையொட்டி, போயஸ் தோட்ட இல்லத்தில், இன்று அதிகாலை முதலே, அலைகடலெனத் திரண்ட கழகத் தொண்டர்கள் உற்சாகத்துடன் வாழ்த்து முழக்கங்கள் எழுப்பினர். முதலமைச்சருக்கு, அமைச்சர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பூங்கொத்து வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளையொட்டி, அதிகாலை முதலே கழகத் தொண்டர்கள் போயஸ் தோட்ட இல்லத்தை நோக்கி, ஆரவாரமும், உற்சாகத்துடனும் குவியத் தொடங்கினர். போயஸ் தோட்ட வளாகத்திலேயே கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்ட அவர்கள், உணர்ச்சி பொங்க வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர். ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கியும், கேக் வெட்டியும் தங்களது மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.

முதலமைச்சரின் பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி கொண்டு வரப்பட்ட பிரசாதங்கள் முதலமைச்சருக்கு வழங்கப்பட்டன. அமைச்சர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பூங்கொத்து வழங்கி, முதலமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். எழுச்சிமிக்க கழகத் தொண்டர்களின் உணர்ச்சி மிக்க கொண்டாட்டங்களின் காரணமாக, போயஸ் தோட்ட வளாகமே விழாக்கோலத்துடன் காட்சியளிக்கிறது.