முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரதிதாசன் பேரன் நன்றி

அறக்கட்டளை தலைவரும் பாரதிதாசன் பேரனுமான பாரதி அறிக்கை:patnaik-meets-jayalalithaa-295

புதுச்சேரி : பாரதிதாசன் பிறந்த நாள், கவிஞர் நாளாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு, பாரதி தாசன் அறக்கட்டளை நன்றி தெரிவித்துள்ளது. பாரதிதாசன் பிறந்த நாள், இனி ஆண்டு தோறும் தமிழக அரசு சார்பில் கவிஞர் நாளாக கொண்டாடப்படும். பாரதிதாசன் 125வது ஆண்டு பிறந்த நாள் விழா, 125 கவிஞர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் கவியரங்கம் நடக்கும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு வெளியிட்ட அவருக்கு, பாரதிதாசன் அறக் கட்டளை மற்றும் பாரதிதாசன் குடும்பத்தார் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்.