முதல்வர் ஜெயலலிதாவிற்கு திரைப்பட சங்கங்கள் வாழ்த்து

முதல்வர் ஜெயலலிதாவிற்கு திரைப்பட சங்கங்கள் வாழ்த்து

ஞாயிறு, மே 22,2016,

மீண்டும் முதல்வராக பொறுப்பேற்கும் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட சம்மேளனம் (பெப்சி) ஆகிய திரைப்பட சங்கங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் ‘மக்களுக்காக நான்!! மக்களால் நான்!’ என்று சூளுரைத்து தமிழகம் முழுவதும் தன்னிகரில்லா அரிதி பெரும்பான்மையான வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராய் அரியணை ஏறும் ஜெயலலிதா அவர்களுக்கும் மற்றும் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், ஒட்டுமொத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்’’.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட சம்மேளனம் (பெப்சி):

ஜெயலலிதாவின் மாபெரும் வெற்றியை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தொழிலாளர்களாகிய நாங்கள் மனதார கொண்டாடுகிறோம். அவரை நேரில் சந்தித்து இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபோது மகிழ்ச்சி அடைந்தார்கள். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) தொழிலாளர்கள் சார்பாக அவருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்வதுடன் இந்த வரலாற்று சாதனை படைத்த ஜெயலலிதாவுக்கு மனதார வாழ்த்துகளை தெரிவிப்பதாக சம்மேளன செயற்குழுவில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.