முதல்வர் ஜெயலலிதாவுக்கு லண்டன் மருத்துவர் சிகிச்சை : பண்ருட்டி ராமச்சந்திரன்

சனி, அக்டோபர் 01,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு லண்டன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தது குறித்து அதிமுக அமைப்புச் செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியிருந்தார்.

இது குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சரின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பவும், புகைப்படத்தை வெளியிடுமாறு வலியுறுத்தவும் கருணாநிதிக்கு எந்த உரிமையும் இல்லை. மேலும், முதலமைச்சர் ஜெயலலிதா நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்பதை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர் என்று கூறினார். லண்டன் பிரிட்ஜ் மருத்துவமனையின் மருத்துவர் ரிச்சர்டு ஜான் பியேர் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் வந்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்,