முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்த நோய்த்தொற்றுகள் முழுவதும் குணமடைந்துவிட்டன : டாக்டர் பிரதாப் சி.ரெட்டி

முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்த நோய்த்தொற்றுகள் முழுவதும் குணமடைந்துவிட்டன : டாக்டர் பிரதாப் சி.ரெட்டி

ஞாயிறு, நவம்பர் 13,2016,

முதல்வர் ஜெயலலிதா, தொற்றுநோய் தாக்குதலில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டார்’ என்றும், ‘வழக்கமான உணவுகளையே சாப்பிட்டு வருகிறார்’, என்றும் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்த நோய்த்தொற்றுகள் குணமடைந்துவிட்டன. அவர் புத்துணர்ச்சி பெற வேண்டியுள்ளதால் இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார். அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். மனதளவிலும், உடலளவிலும் திடமாக இருக்கிறார்.

தற்போது சாதாரண உணவுகளை எடுத்துக்கொள்கிறார். முதல்வரின் விருப்பம் பொறுத்தே வேறு வார்டுக்கு மாற்றப்படுவார். முதல்வர் வீடு திரும்புவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என்று கூறினார்.

மேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்”  இந்த லிங்கை கிளிக் செய்யவும்.