முதல்வர் ஜெயலலிதாவுக்கு ‘திடீர் ‘ உடல்நலக் குறைவு ; தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ‘திடீர் ‘ உடல்நலக் குறைவு ; தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

ஞாயிறு, டிசம்பர் 04,2016,

சென்னை ; கடந்த இரண்டு மாதமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை தேறி வந்த நிலையில் , இன்று  மாலையில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் இதயத்தை சீராக்கும் கருவியுடன் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக, சென்னை அப்பலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதய நோய் மருத்துவர்கள் சுவாசயியல் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தீவிர சிகிச்சை நிபுணர்களும் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.