முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கில் விஜயதரணி எம்எல்ஏக்கு பிடிவாரண்டு

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கில் விஜயதரணி எம்எல்ஏக்கு பிடிவாரண்டு

வியாழன் , ஜூன் 16,2016,

நாகர்கோவில்  – முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதரணிக்கு நாகர்கோவில் செசன்சு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. குமரி மாவட்டம் கருங்கல் சந்தை திடலில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, இளங்கோவன் மற்றும் விஜயதரணி ஆகிய இருவரும் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக நாகர்கோவில் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் அரசு வக்கீல் ஞானசேகர் வழக்கு தொடர்ந்தார்.  விஜயதரணி எம்.எல்.ஏ., மீதான வழக்கு நேற்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றத்தில் விஜயதரணி எம்.எல்.ஏ., ஆஜராகவில்லை. அவரது உதவியாளர் ராஜகோபால் நீதிமன்றத்தில் ஆஜராகி விஜயதரணி நீதிமன்றத்துக்கு வராததற்கான காரணத்தை மனுவாக தாக்கல் செய்தார். இதற்கு அரசு வக்கீல் ஞானசேகர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத விஜயதரணி எம்.எல்.ஏ.,வுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நாகர்கோவில் செசன்சு கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.