முதல்வர் ஜெயலலிதா அதிரடி-ஜாதி பிரச்னையை கிளப்பியவர்கள்,கட்சியில் இருந்து நீக்கம்-முதல்வர் நடவடிக்கைக்கு, பல தரப்பினரும் வரவேற்பு

முதல்வர் ஜெயலலிதா அதிரடி-ஜாதி பிரச்னையை கிளப்பியவர்கள்,கட்சியில் இருந்து நீக்கம்-முதல்வர் நடவடிக்கைக்கு, பல தரப்பினரும் வரவேற்பு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயபாஸ்கர்; சுகாதாரத் துறை அமைச்சராக உள்ளார். இவர் மீது, கட்சியின் கறம்பக்குடி முன்னாள் ஒன்றிய செயலர் சொக்கலிங்கம்; அவரது மனைவியும், கறம்பக்குடி ஒன்றிய தலைவருமான கெங்கையம்மாள் ஆகியோர் புகார் தெரிவித்தனர். ‘தாய் சேய் நல விடுதி அமைப்பது தொடர்பாக, அமைச்சரிடம் ஆலோசிக்க சென்ற போது, ஜாதியை சொல்லி திட்டி அவமானப்படுத்தினார்’ என, இவர்கள் கூறியதை அடுத்து, அமைச்சருக்கு எதிராக, முத்தரையர் சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்; இதில், 1,852 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சர்ச்சையால் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில், அ.தி.மு.க.,வினர் இடையே, ஜாதி மோதல் வெடிக்கும் அபாயம் எழுந்தது.இதனால், கடும் கோபம் அடைந்த ஜெயலலிதா, இதற்கு காரணமானவர்கள் யார் என கண்டறிந்து, தகவல் தரும்படி, உளவுத்துறைக்கு உத்தரவிட்டார்.விசாரணையில் ஜாதி பிரச்னையை கிளப்பி, அரசியல் ஆதாயம் தேட முயன்றதும், அதற்கு, அ.தி.மு.க.,வில் சிலர் துணை போவதும் தெரியவந்தது.மேலும், தி.மு.க.,வைச் சேர்ந்த சில புள்ளிகள், இந்த பிரச்னையை மையமாக வைத்து, ஆளும் கட்சிக்கு எதிராக, காய் நகர்த்திய விஷயமும் தெரிய வந்தது. ‘இனிமேலும் இதுபோன்ற ஜாதி பிரச்னை, கட்சியில் தலை துாக்காமல் இருக்க,முதல்வர் ஜெயலலிதா ஜாதி பிரச்னையை கிளப்பிய சொக்கலிங்கம், அவரது மனைவி கெங்கையம்மாள் ஆகியோர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக, நேற்று அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.