முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பட்டுரகங்களுக்கான தள்ளுபடி விற்பனை:அமைச்சர் கோகுல இந்திரா தொடங்கிவைத்தார்

முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பட்டுரகங்களுக்கான தள்ளுபடி விற்பனை:அமைச்சர் கோகுல இந்திரா தொடங்கிவைத்தார்

வியாழன் , டிசம்பர் 31,2015,
சென்னை : பொங்கல் பண்டிகையையொட்டி முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பட்டுரகங்களுக்கான 40 சதவீத தள்ளுபடி விற்பனையை அமைச்சர் கோகுல இந்திரா சென்னையில் தொடங்கிவைத்தார். முதல்வர் ஜெயலலிதா ஆணைப்படி பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் நடத்தும் “” பொங்கல் – 2016 சிறப்புகைத்தறி கண்காட்சி “” சென்னை, ஆழ்வார் பேட்டை, எல்டாம்ஸ் சாலையில்உள்ள சி.பி. ஆர்ட் சென்டர் மெயின் ஹாலில் நேற்று தொடங்கியது வரும் ஜனவரி 5ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்,கோகுல இந்திரா, தொடங்கி வைத்தார்

அப்போது அமைச்சர் கோகுலஇந்திரா கைத்தறிபட்டு சேலை நெசவாளர்களின் துயர் துடைத்திட முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பட்டு சேலைகளுக்கான 15ரூ விசேட சிறப்பு தள்ளுபடியினையும் சில குறிப்பிட்ட பட்டுரகங்களுக்கான 40 சதவீத தள்ளுபடியையும் அறிவித்து, விற்பனையினை துவக்கி வைத்தார்.இவ்விழாவில் தமிழக அரசின் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை, அரசு முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், கைத்தறிமற்றும் துணிநூல் துறை இயக்குநர் ஜி. லதா,, கோஆப்டெக்ஸ் தலைவர் கே.வி. மனோகரன் கோ-ஆப்டெக்ஸ்மேலாண்மை இயக்குநர்.வெங்கடேஷ் மற்றும் கோஆப்டெக்ஸ்உபதலைவர் எஸ். ஜெயந்தி சோமசுந்தரம்ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கண்காட்சியில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கைத்தறியில் பிரத்யேகமாகவடிவமைக்கப்பட்ட காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், சேலம் பாரம்பரிய பட்டுசேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், கூறைநாடு, செட்டி நாடு மற்றும்ஆர்கானிக் பருத்தி சேலைகள், கோயம்புத்தூர், அருப்புக்கோட்டை, திண்டுக்கல்,மதுரை, பரமக்குடி மற்றும் திருச்சி பருத்தி சேலைகள் ஆகியவை கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கான அழகான குர்த்தீஸ்,ஜெயகார்த்திகா சேலைகள், ஆண்களுக்கான ஆயத்த ஆடைகள், லினன் சட்டைகள்ஆகியவையும் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் பருத்தி இரகங்களுக்கு அரசுதள்ளுபடி 30ரூ வரை வழங்கப்படுகிறது.
இந்த அரிய வாய்ப்பினை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.