அம்மா சிறுவணிகக் கடனுதவி திட்டத்தினை விரைந்து செயல்படுத்த அமைச்சர்.செல்லூர் கே.ராஜூ நடவடிக்கை

அம்மா சிறுவணிகக் கடனுதவி திட்டத்தினை விரைந்து செயல்படுத்த  அமைச்சர்.செல்லூர் கே.ராஜூ நடவடிக்கை

வியாழன் , ஜனவரி 28,2016,

முதல்வர் ஜெயலலிதா அறிவித்த சிறுவணிக கடனுதவி திட்டத்தில் இதுவரை 70 ஆயிரம் பேருக்கு கடன் உதவி வழங்கப்பட்டு்ள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த ,மழையினால் பாதிக்கப்பட்ட சிறுவணிகர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 2 இலட்சம் நபர்களுக்கு ரூ.100 கோடி கடன் வழங்கும் அம்மா சிறுவணிகக் கடனுதவி திட்டத்தினை விரைந்து செயல்படுத்துவது குறித்து மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர்.செல்லூர் கே.ராஜூ அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு நடத்தினார். .

தமிழகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மழைபொழிவினால் பாதிக்கப்பட்ட சிறுவியாபாரம் செய்து வரும் தெரு வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்கள், குறிப்பாக, மகளீர், தங்களது வியாபாரத்தினை மீண்டும் தொடர்ந்து நடத்த முதலமைச்சர் ஜெயலலிதா, கூட்டுறவு வங்கிகள் மூலம் தலா ரூ.5000 வீதம் வட்டியில்லா கடன் வழங்க ஆணையிட்டுள்ளார்.. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 1,582 முகாம்கள் நடத்தப்பட்டு, 70,450 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களைத் தந்த முதலமைச்சர்ஜெயலலிதா மற்றுமொரு புதிய திட்டமான வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மற்றும் கூடுதல் பதிவாளர்கள், தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியின் தலைவர், கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகிகள் மற்றும் துறையின் உயர் அலுவலர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டகூட்டுறவுத் துறை அமைச்சர்செல்லூர் கே.ராஜூ கீழ்க்கண்ட அறிவுரைகளை வழங்கினார்.

1) இம்முகாம்கள் வியாபாரிகள், அவர்கள் வியாபாரம் செய்யும் இடத்திற்கே சென்று, குறிப்பாக, மார்கெட் பகுதிகள், பேருந்து நிலையங்கள், போன்ற இடங்களில் நடத்தவேண்டும்.

2) அவசியம் ஏற்படின் கூடுதல் முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

3) முகாம்கள் நடத்தப்படுவதை வியாபாரிகள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் முன்கூட்டியே விளம்பரம் செய்யவதோடு, இத்திட்டத்தின் நோக்கம் மற்றும் கடன் பெறும் வழிமுறைகளை சிறு வியாபாரிகளுக்கு வங்கி அதிகாரிகள் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.

4) முதல்வர் ஜெயலலிதா சிறு வியாபாரிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கத்தோடும், அவர்களை கந்துவட்டிகாரர்களின் பிடியிலிருந்து விடுவிக்கும் நோக்கத்தோடும் கொண்டுவரப்பட்ட இந்த சிறப்பான திட்டத்தினை கூட்டுறவுத் துறை அலுவலர்களும், வங்கி அலுவலர்களும் மிகவும் முனைப்புடன் செயல்பட்டு இதன் மூலம் அனைத்து சிறு வியாபாரிகளும் பயன் அடைய அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். இந்த ஆய்வுக்கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்.ஜெயஸ்ரீ முரளீதரன் கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர்கள் மற்றும் கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.