முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி மதுரை அருகே அமையவுள்ள துணைக்கோள் நகரத்தினை தமிழக அமைச்சர்கள் நேரில் ஆய்வு

முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி மதுரை அருகே  அமையவுள்ள துணைக்கோள் நகரத்தினை தமிழக அமைச்சர்கள் நேரில் ஆய்வு

திங்கள் , ஜூன் 20,2016,

திருமங்கலம் ; தமிழக முதல்வரின் மேலான ஆணைக்கிணங்க மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள உச்சப்பட்டி-தோப்பூர் பகுதியில் ரூ.218.77கோடி மதிப்பீட்டிலான துணைக்கோள் நகரம் அமையவுள்ள இடத்தினை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ,மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டு வரும் மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைத்து மக்கள் இயற்கையான சூழலில் வசித்திட ஏதுவாக தமிழக முதல்வர் அம்மா அவர்கள் 110வது விதியின் கீழ் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள உச்சப்பட்டி-தோப்பூர் பகுதியில் ரூ.218.77கோடி திட்டமதிப்பீட்டில் துணைக்கோள் நகரம்(சாட்டிலைட்சிட்டி)அமைத்திட உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் மேற்கண்ட பகுதிகளில் 573.83ஏக்கர் பரப்பளவில் செயற்கைகோள் நகரம் அமைத்திட பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது.அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் 9557வீடுகள் கொண்ட இந்த செயற்கைகோள் நகரத்தில் சாலைகள்,குடிநீர்வசதி,பாதாள சாக்கடை வசதி,கழிவுநீர் வாய்க்கால்,மழைநீர் சேமிப்பு,தெருவிளக்குகள்,பள்ளி வளாகம்,வணிக வளாகம்,காவல்நிலையம்,ஆரம்பசுகாதார நிலையம்,தீயணைப்பு நிலையம் என அனைத்து வதிகளும் செய்துதரப்படுகிறது.தற்போது இந்த செயற்கைகோள் நகரத்தில் சாலைகள்,கழிவுநீர் வாய்க்கால் மற்றும் பாதாள சாக்கடை அமைக்கும் முதல்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழக முதல்வரின் மேலான ஆணைக்கிணங்க ரூ.218.77கோடி மதிப்பீட்டில் 9557 வீடுகளுடன் அமைக்கப்பட்டு வரும் இந்த செயற்கை கோள் நகரத்தினை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,கூட்டுறவுத்;துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ,மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு நடைபெற்று பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.மேலும் செயற்கைகோள் நகரத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற அமைச்சர்கள் மற்றும் கலெக்டர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

அப்போது எம்.எல்.ஏக்கள் வி.வி.ராஜன்செல்லப்பா,கே.மாணிக்கம், பெரியபுள்ளான்(எ)செல்வம், மதுரை மேயர்(பொ)கு.திரவியம்,முன்னாள் எம்.எல்.ஏ.,தமிழரசன், முன்னாள் வாரிய தலைவர் ஜெயராமன்,மாவட்ட கவுன்சிலர் அய்யப்பன்,மாவட்ட அரசு வழக்கறிஞர் தமிழச்செல்வம்,உசிலை கோட்டாட்சியர் பாலசுப்பிரமணின்,திருமங்கலம் தாசில்தார் ராஜேந்திரன்,திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,கள்ளிக்குடி சேர்மன் மகாலிங்கம்,திருமங்கலம் வேளாண் விற்பனை குழு தலைவர் ஆண்டிச்சாமி,திருமங்கலம் அர்பன் வங்கி தலைவர் ஜே.டி.விஜயன்,மற்றும் கட்சி நிர்வாகிகள் எம்.எஸ்.பாண்டியன், ஜான்மகேந்திரன்,வக்கீல் ரமேஷ்,திருப்பதி,ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன்,ராமசாமி, பிரபுசங்கர்,நிரஞ்சன்,பாண்டியன் மற்றும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அதிகாரிகள்,வருவாய்துறை,நிலஅளவை,பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.