முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி சாதனைகள் அடங்கிய புத்தகங்களை நாகர்கோவிலில் தமிழ் மகன் உசேன், என். தளவாய் சுந்தரம் ஆகியோர் வீடு வீடாக சென்று வழங்கினர்

முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி சாதனைகள் அடங்கிய புத்தகங்களை நாகர்கோவிலில் தமிழ் மகன் உசேன், என். தளவாய் சுந்தரம் ஆகியோர் வீடு வீடாக சென்று வழங்கினர்

திங்கள் கிழமை, பிப்ரவரி 08, 2016,

முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி சாதனைகள் அடங்கிய புத்தகங்களை ஜெயலலிதா பேரவை சார்பில் நாகர்கோவிலில்  எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன், மாவட்ட செயலாளர் என். தளவாய் சுந்தரம் ஆகியோர் வீடு வீடாக சென்று வழங்கினர்.
ஜெயலலிதாவை முதலமைச்சராக்க வேண்டி மாபெரும் லட்சிய பேரணி மற்றும் தெருமுனை கூட்டம் நாகர்கோவில் கோட்டார் ரெயிலடி திடலில் நடைப்பெற்றது. அங்கிருந்த புறப்பட்ட லட்சிய பேரணி கம்பளம்,கண்ணாகுடிதெரு, கல்மட தெரு, வடிவீஸ்வரம், தெற்குரத வீதி, கீழரதவீதி, வடக்கு ரத வீதி, சாஸ்தான் கோவில் தெரு, தளவாய் தெரு வழியாக மீனாட்சிபுரம் சந்திப்பில் நிறைவடைந்தது.
அப்போது ஜெயலலிதா ஆட்சி சாதனைகள்  அடங்கிய 40 பக்க புத்தகம் மற்றும் சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா பேசிய முழு பேச்சுக்கள் அடங்கிய 28 பக்க புத்தகம் ஆகிய 2 புத்தகங்கள் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டன.  அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவருமான அ.தமிழ் மகன் உசேன், கழக சிறுபான்மையினர் நலம் பிரிவு தலைவர்  ஜஸ்டின் செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் என்.தளவாய்சுந்தரம், டி.கே.பச்சைமால் எம்.எல்.ஏ.,  ஏ. நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு  வீடு வீடாக சென்று புத்தகங்களை  வழங்கினார்கள்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும்,மாநில மீன்வள கூட்டுறவு இணையத் தலைவருமான எம்.சேவியர் மனோகரன் தலைமை வகித்தார். நாகர்கோவில் நகரசெயலாளர் எம். சந்திரன் முன்னிலை வகித்தார். பேரவை செயலாளரும், கவுன்சிலருமான என்.என். ஸ்ரீஅய்யப்பன் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் கவிஞர் சதாசிவம் பொருளாளர் ஏ. ராஜன், மாவட்ட அணி செயலாளர்கள் காரவிளை செல்வன் டாரதி சாம்சன், எஸ்.ஏ. அசோகன் ஜெயசந்திரன், தலைமை கழக பேச்சாளர்கள் நீலகண்டன், மாதவன் பிள்ளை,  கவுன்சிலர்கள் செல்லத்தாய், ஸ்ரீமணிகண்டன் ஜெ.ஜெ. சந்திரன் மாவட்டஎம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர்கள் என்ஜினீயர் லட்சுமணன்,வழக்கறிஞர் ஜெயகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வார்டு  செயலாளர் வேலயுதம் நன்றி கூறினார்.