முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் அமைச்சர்கள் – நிர்வாகிகள் வழங்கினர்

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் அமைச்சர்கள் – நிர்வாகிகள் வழங்கினர்

வியாழன் , டிசம்பர் 10,2015,

சென்னை : முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உத்தரவின் பேரில் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம், ஆர்.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் ரூ.3 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் பா.வளர்மதி, மேற்பார்வையில் ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் ரூ.50,000/- மதிப்பில் 200 பேருக்குபால் பவுடர், தட்டு, டம்ளர், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. கோடம்பாக்கம் ஜக்ரியா பகுதியில் சேலை, போர்வை, பால் பவுடர், பாய், தட்டு,டம்ளர், தண்ணீர் பாட்டில்கள் ஆகிய ஏழு பொருட்கள் 100 பேருக்கு மொத்தம் ரூ.40,000/- மதிப்பில் வழங்கப்பட்டன. சூளைமேடு ரோடு, நேரு தெருவில், சேலை, பால் பவுடர், போர்வை, தட்டு, தண்ணீர், டம்ளர்  270 பேருக்கும், கோடம்பாக்கம் டிரஸ்ட்டுபுரம் பகுதியில் 200 பேருக்கும் வழங்கப்பட்டன.

இதேபோன்று நேற்று (முன்தினம் விருகம்பாக்கம்-காமராஜ்புரம், அருந்ததிநகரில் 500 பேருக்கு பிஸ்கட், பால்பவுடர், குடிநீர், தட்டு போன்றவைகளையும், சூளைமேடு கில் நகரில் 2000 பேருக்கு சேலை, தட்டு, பிஸ்கட், குடிநீர், டம்ளர், ஸ்புன்போன்றவைகளையும், நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் 200 பேருக்கு தலா ரூ.300/- மதிப்பில் 5 கிலோ அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, 1 கிலோ கோதுமை மாவு, அரைகிலோ எண்ணெய் ஆகிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் (ம)சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மேற்பார்வையில் தாம்பரம், முடிச்சூர், மணிமங்கலம், பி.டி.சி. காலனி ஆகிய பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள அரிசி, போர்வை, பாய், வேட்டி, சேலை, நைட்டி, கைலி, டவல், ஹார்லிக்ஸ் 200 கிராம், பால் படவுர், பிஸ்கட், டீ தூள், நாப்கின், குளியல்சோப்பு 2, வாஷிங் சோப்பு 2, புஸ்ட் ஆகிய 18 பொருட்களை கொண்ட ஐம்பதாயிரம்பாக்கெட்டுகள் சுமார் 70 லாரிகள் வாயிலாக கொண்டுவரப்பட்டும் காய்கறிகள் 20 டன்லாரிகள் மூலம் எடுத்து வரப்பட்டு வழங்கப்பட்டன.

சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் – 3000, போர்வை – 1000, துண்டு, கைலி, நைட்டி, மெழுகுவர்த்தி மற்றும் 18பொருட்களை கொண்ட பாக்கெட்டுகள் மூன்று லாரிகள் வாயிலாக ஆக மொத்தம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேற்கண்ட பொருட்கள் வழங்கப்பட்டன. அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர்.சின்னச்சாமி மேற்பார்வையில் ஆர்.கே.நகர் பாதிக்கப்பட்டுள்ள 5000 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக பாய், போர்வை, நைட்டி, டி-சார்ட், கைலி, குழந்தைகளுக்கான உடைகள் மற்றும் பால்பவுடர் ஆகிய ஏழுபொருட்கள் அடங்கிய ரூ.30 இலட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள்வழங்கப்பட்டன.